🔴🇫🇷💉பிரான்ஸில் தயாரிக்கப்படவுள்ள கொரோனா தடுப்பூசிகள்! வெளியான முக்கிய தகவல்!

ஐராப்பிய ஒன்றியமும் முக்கியமாகப் பிரான்சும் ரஸ்யாவின் கொரோனாத்தடுப்பு ஊசிகளான Spoutnik V யினை மற்றநாடுகள் கொள்வனவு செய்வதைத்தடுக்க வேண்டும் என்றும், ஆபிரிக் நாடுகளிற்கான மொடேர்னா, அஸ்ராஸெனகா போன்ற கொரோனாத் தடுப்பு ஊசிகளை உடனடியாக வழங்கவேண்டும், தவறினால் அவர்கள் ரஸ்யாவிடம் வாங்கி விடுவார்கள் எனவும் அண்மையில் எமானுவல் மக்ரோன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது, ரஸ்யாவின் Spoutnik V கொரோனாத் தடுப்பு ஊசிகளை பிரான்சிலும் தயாரிப்பதற்கும், மற்றும் ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் தயாரிப்பதற்கும் அனுமதி பெற்றுள்ளதாக ரஸ்யாவின் இறையாண்மை நிதியமான RDIF (Le Fonds souverain russe) தெரிவித்துள்ளது.

இதில் பெருமளவான தாயரிப்புகள் பிரான்சில் மேற்கொள்ளப்படும் எனவும் இந்த ஆய்வுகூடங்களில் தயார் செய்யப்படுபவை ஐரோப்பாவின் தேவைகளிற்கு மட்டுமே பயன்படுத்தப்படும். மேலதிகப் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்துப் பாதுகாப்பு நிறுவனத்தின் அங்கீகாரம் வழங்கப்பட்டவுடன், ஐரோப்பாவிற்கு மட்டுமான தேவைகள் பெருமளவில் நிறைவு செய்யப்டும’ என ரஸ்ய இiறாயண்மை நிதியத்தின் தலைவர் Kirill Dmitriev தெரிவித்துள்ளார்.