🔴🇫🇷 விசேட செய்தி! பிரான்ஸில் நான்கு பிள்ளைகளின் தாய் படுகொலை!

கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி, நான்கு பிள்ளைகளின் தாயார் ஒருவர் சாவடைந்துள்ளார். இச்சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை Aubervilliers (93) நகரில் இடம்பெற்றுள்ளது.

இங்கு வசிக்கும் குடும்பம் ஒன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கணவர் சமையலுக்கு பயன்படுத்தும் கத்தி ஒன்றினால் தனது மனைவியை சரமாரியாக குத்தியுள்ளார். படுகாயமடைந்த மனைவி, சாவடைந்துள்ளார். பின்னர் தாக்குதல் நடத்திய கணவரே காவல்துறையினரை அழைத்துள்ளார்.

அவர்களுக்கு நான்கு பிள்ளைகள் எனவும், மூத்த பிள்ளைக்கு 14 வயது எனவும், மீதமானவர்கள் அவர்களுக்கு கீழ் உள்ளவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை பொபினி நகர அரச வழக்கறிஞர் அலுவலகம் ஆரம்பித்துள்ளது.