♦️🇫🇷மக்ரோன் ஏன் தாக்கப்பட்டார்?

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனை கன்னத்தில் அறைந்த Damien Tarel, இன்று நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளார்.
28 வயதுடைய Damien Tarel என்பவர், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனை கன்னத்தில் அறைந்தமைக்காக கைது செய்யப்பட்டிருந்தார். அவர் இன்று வியாழக்கிழமை நண்பகல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார். இச்சம்பவத்தில் கைதான இரண்டாவது நபர் பின்னரே (திகதி அறிவிக்கப்படவில்லை) நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட உள்ளார். இந்நிலையில், கைதான Damien Tarel தெரிவிக்கையில், நான் யோசிக்காமல் நடந்துகொண்டேன். எனது அதிருப்தியை வெளிப்படுத்த அவ்வாறு நடந்துகொண்டுவிட்டேன்! என அவர் வாக்குமூலம் அளித்ததாக அரச வழக்கறிஞர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.