⚫🇫🇷பிரான்ஸில் பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு!

பயங்கரவாத தாக்குதல் நடத்த முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு, ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று சனிக்கிழமை இரவு அவர்கள் கைது செய்யப்பட்டனர். பயங்கரவாத தடுப்புப்பிரிவு வழங்கிய தகவல்களின் அடிப்படையில் Béziers (Hérault) நகரில் வைத்து இப்பெண்கள் கைது செய்யப்படிருந்தனர். அவர்களது வீட்டினை சுற்றி வளைத்த Direction générale de la sécurité intérieure அதிகாரிகள், அதிரடியாக அவர்களை கைது செய்தனர். விசாரணைகளில், அப்பெண்களின் ஒருவர் Montpellier நகரில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரது வீடு சோதனையிடப்பட்டு, சில வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.