⚫🇫🇷பிரான்ஸின் இன்றைய தாக்குதல்! வெளியான முக்கிய தகவல்!

இன்று காலை La Chapelle-sur-Erdre (Loire-Atlantique) நகர காவல்நிலையத்தில் தாக்குதல் நடத்திய நபர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி சாவடைந்துள்ளான். தாக்குதலுக்கு இலக்கான பெண் காவல்துறை அதிகாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். தாகுதல் நடத்தியவன் காவல்துறையினரால் முன்னதாக நன்கு அறியப்பட்டவன் என சற்று முன்னர் வெளியான செய்திகளில் தெரியவந்துள்ளது.

யார் இந்த தாக்குதலாளி..??

39 வயதுடைய Ndiaga Dieye எனும் நபரே இந்த தாக்குதலில் ஈடுபட்டிருந்தான். தீவிர அடிப்படை இஸ்லாமியத்தை பயிற்றுகொண்டிருந்துள்ளான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், d’Arleux (Nord) நகரில் ஆயுதத்தை பயன்படுத்தி கொள்ளையிட்டிருந்தான் என குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்படிருந்தான். சிறையில் இருந்த அவர் அதே வருடம் செப்டம்பரில் சிறையில் இருந்து தப்பிக்க முயன்றுள்ளான்.

பின்னர் இவ்வருடம் மார்ச் 22 ஆம் திகதி சிறப்பு கண்காணிப்பின் கீழ் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்த நிலையிலே இன்று தாக்குதல் நடத்தியிருந்தான். அத்தோடு, அவன் சில மாதங்கள் மனநல சிகிச்சைக்கும் உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.