⚫🇫🇷பிரான்ஸில் படுகாயமடைந்த காவல்துறை அதிகாரி!

போதைப்பொருள் விற்பனையை தடுக்க முற்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது 15 பேர் கொண்ட குழு தாக்குதல் நடத்தியுள்ளது. இன்று திங்கட்கிழமை நண்பகல் மார்செ 13 ஆம் வட்டாரத்தின் Frais-Vallon பகுதில் இடம்பெற்றுள்ளது.

இங்கு இன்று நண்பகல் போதைப்பொருள் விற்பனை ஒன்றை தடுப்பதற்கு 14 ஆம் வட்ட்டாரத்தைச் சேர்ந்த சிறப்பு களப்பிரிவு காவல்துறை அதிகாரிகள் சிலர் குறித்த சம்பவ இடத்துக்கு வருகை தந்துள்ளனர். அங்கு இளம் நபர் ஒருவர் போதைப்பொருள் விற்பனையை ரகசியமாக மேற்கொண்டுள்ளதை அதிகாரிகள் பார்த்துவிட்டு, அவரை சோதனையிட்டுள்ளனர். அவரது பையில் பல ஆயிரம் யூரோக்கள் பணமும், போதைப்பொருளும் இருந்துள்ளதை பார்த்துவிட்டு, அவரை கைது செய்தனர்.
இப்போது அதிகாரிகள் எதிர்பாரா விதமாக அங்கு பதினைந்துக்கும் மேற்பட்டவர்கள் திடுமென குவிந்தனர். இப்போது அதிகாரிகளை அவர்கள் தாக்கினார்கள்.

கட்டைகள் மற்றும் மட்டைகளை கொண்டு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் அதிகாரி ஒருவரினை கீழே தள்ளி விழுத்தி அவர் மீது மோசமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். பின்னர் அதிகாரிகளிடம் இருந்து பணப்பையை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி மறைந்தனர். படுகாயமடைந்த அதிகாரி ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு உடனடியாக இன்று மாலை தையல் போடப்பட்டது. அத்தோடு அவருக்கு ஏழு நாட்கள் மருத்துவ விடும்பும் வழங்கப்பட்டது.