⚫🇫🇷தலிபான்களுடன் தொடர்பை ஏற்படுத்திய பிரான்ஸ்! குழப்பத்தில் மக்கள்!

பிரெஞ்சு அரசாங்கம் தலிபான்களுடன் தொடர்புகளைப் பேணி வருவதாகத் தலிபான்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சின் பிரதிநிதிகள் குழு இவர்களுடன் இந்த உறவைப் பேணிவருகின்றது.

காபூலில் தொடரும் வெளியேற்ற நடவடிக்கைளான APAGAN மற்றும் RESEVAC நடவடிக்கைளைத் தொடர்ந்து நடாத்துவதற்காக, நடவடிக்கை ரீதியாக தொடர்புகளைத் தாம் தலிபான்களுடன் பேணி வருவதாக, பரிஸ் Quai d’Orsay இலிருக்கும் வெளிவிகார அமைச்கம் தெரிவித்துள்ளது.

கட்டாரில் இருக்கும் டோஹாவில், பிரான்சின் பிரதிநிதிகள் குழு, தலிபான்களின் பிரதிநிதிக்குழுவைச் சந்தித்து பேச்சுவார்தை நடாத்தி உள்ளனர். François Richie தலைமையில் சென்றுள்ள பிரான்சின் குழு, தலிபான்களின் Abbas Stanikzai தலைமையிலான அரசியல் அலுவலகக் குழுவைச் சந்தித்து, விமான நிலையத்தின் ஒழுங்குகள், வெளியேற்ற நடவடிக்கைகளை இலகுவாக்கவதோடு, மேலும் சில நாட்களிற்குத் தொடர்வது பற்றிப் பேசியுள்ளனர். இந்தச் சந்திப்பு, பிரெஞ்சுப் பகுதியாலும், தலிபான் பகுதியாலும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.