🇫🇷தண்டப்பனத்தில் பிரான்ஸ் சாதனை…..!!!!

பிரான்ஸில் நேற்று சனிக்கிழமை ஒரே இரவில் 5.900 பேருக்கு தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது இதுவரை இரவு 8 மணிமுதல் என இருந்த இரவு நேர ஊரடங்கு நேற்று முதல் மாலை 6 மணியில் இருந்து நடமுறைக்கு கொண்டுவரப்பட்டது.

அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர் ஊரடங்கை மீறி போதிய ஆவணங்கள் இன்றி பயணித்தவர்களை காவல்துறையினர் சோதனையிட்டனர்.

இப்படி முதல் நாளில் 5.900 பேருக்கு காவல்துறையினர் தண்டப்பணம் அறவிட்டனர்.

முன்னதாக டிசம்பர் 16 ஆம் திகதி முதன் முதலாக இரவு நேர ஊரடங்கு (இரவு 8 மணிமுதல்) நடைமுறைக்கு வந்தது அன்றைய முதல் நாள் இரவில் 802 பேருக்கு நாடு முழுவதும் தண்டப்பணம் அறவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.