⚫🇫🇷பிரான்ஸ் மாவட்டம் ஒன்றில் 603 பேருக்கு தண்டம்!

அதிவேகமாக வீதியில் பயணித்த குற்றத்துக்காக இரண்டு நாட்களில் 603 பேருக்கு தண்டப்பணம் அறவிடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
Seine-et-Marne மாவட்டத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த வாரத்தில் Servon பகுதியில் புதிதாக ஒரு வீதி கண்காணிப்பு ரேடார் கருவி பொருத்தப்பட்டிருந்தது. திடீரென ரேடார் கருவி முளைக்கும் என்பதை எதிர்பாராத சாரதிகள், வழமை போன்று அதிவேகமாக பயணித்துள்ளனர்.


இதனால் ரேடார் கருவி பொருத்தப்பட்ட முதல் இரு நாட்களில் மாத்திரம் மொத்தமாக 603 மகிழுந்துகளுக்கு ரேடார் Flash செய்துள்ளது. இரண்டு நாட்களில் ஒரு பகுதியில் அமைக்கப்பட்ட ரேடார் கருவி இத்தனை முறை Flash செய்வது இதுவே முதன் முறையாகும்.