🇫🇷பிரான்ஸில் விருந்தில் கலந்துகொண்ட 90 பேருக்கு தண்டப்பணம்….!!!!!

பிரான்ஸில் சுகாதார கட்டுப்பாடுகளை மீறி இரகசிய விருந்தில் கலந்துகொண்ட 90 பேருக்கு தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது இந்த விருந்து வெள்ளிக்கிழமை இரவு Collegien ,Seine-et-Marne நகரில் இடம்பெற்றுள்ளது.

இங்குள்ள பொருட்கள் சேமிப்பகம் ஒன்றில் இந்த விருந்து இரவு 9 மணி அளவில் இடம்பெற்றது 100 பேர் வரை இதில் கலந்துகொண்டனர் முகக்கவசங்கள் அணியாமல் சுகாதார இடைவெளி கடைப்பிடிக்காமல் இடம்பெற்ற இந்த இரகசிய விருந்தில் அழையா விருந்தாளியாக காவல்துறையினர் உள் நுழைந்தனர் விருந்தில் கலந்துகொண்ட 90 பேருக்கு €135 யூரோக்கள் வீதம் தண்டப்பணம் அறவிட்டார்கள்.

ஒலி பெருக்கிகள் மதுபான போத்தல்கள் மின் விளக்குகள் என பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன இச்சம்பவத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.