🇫🇷பிரான்ஸ் தபால் சேவை கட்டணம் அதிகரிப்பு!

புதுவருடத்தில் தபால் கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளது. தற்போது €0,95 யூரோவுக்கு விற்பனையாகும் timbre gris முத்திரை ஒன்று வரும் ஜனவரி 2021 முதல் €1,06 யூரோக்களாக அதிகரிக்கப்பட உள்ளது. கிட்டத்தட்ட + 11.6% வீதம் விலை அதிகரிக்கப்படுகின்றது. அதேவேளை சாதாரண முத்திரை (timbre ordinaire) ஒன்று €0,79 யூரோக்களில் இருந்து €1,08 யூரோக்களாக அதிகரிக்கப்பட உள்ளது.

கிட்டத்தட்ட +11,3% வீதம விலை அதிகரிக்கப்படுகின்றது. 24 மணிநேரத்துக்குள் விநியோகிக்கப்படும் envoi prioritaire பொதி சேவைகளுக்கான கட்டணம் €1,16 யூரோக்களில் இருந்து €1,28 யூரோக்களாக அதிகரிக்கப்படுகின்றது. நிறுவனங்கள், தொழில்சார்ந்த பொதி சேவைகளுக்கான கட்டணம் 3.9% வீதத்தால் அதிகரிக்கப்பட உள்ளது.