🔴🇫🇷பிரான்ஸில் ஜொந்தாம் அதிகாரியின் அதிர்ச்சி செயல்!

ஜொந்தாம் அதிகாரி ஒருவர் தனது சேவைத்துப்பாக்கியை பயன்படுத்தி, தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
Bapaume (Pas-de-Calais) நகரில் பணிபுரியும் ஜொந்தாம் அதிகாரியே தற்கொலை செய்துகொண்டுள்ளார். நாற்பது வயதுடைய குறித்த அதிகாரியின் உடலம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இவரது தற்கொலை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உடன் பணிபுரிந்த சக அதிகாரிகள் மூலம் அவர் சமீப நாட்களாக தீவிர மன அழுத்தத்தில் இருந்தது தெரியவந்துள்ளது. இவ் வருடத்தில்இடம்பெறும் ஒன்பதாவது ஜொந்தாமினரின் தற்கொலை இதுவாகும். சக அதிகாரிகள் மறைந்த அதிகாரிக்கு அஞ்சலி செலுத்தி வருகினர்.