பிரான்ஸ் தடுப்பூசியால் நிகழ்ந்த விபரீதம்! வெளியான அதிர்ச்சி தகவல்!

AstraZeneca தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் ஒருவர் சாவடைந்துள்ளதை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. Toulouse நகரில் வசிக்கும் 62 வயதுடைய பெண்மணி ஒருவர் இம்மத ஆரம்பத்தில் AstraZeneca தடுப்பூசி போட்டுக்கொண்டார். இந்நிலையில், கடந்த 23 ஆம் திகதி திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஆனால் அதற்குள் அவர் சாவடைந்துள்ளார். இந்நிலையில், இந்த AstraZeneca தடுப்பூசி போட்டுக்கொண்டதாலே அவர் சாவடைந்துள்ளதாக அவர்களது குடும்பத்தினர் எழுப்பிய குற்றச்சாட்டை அடிப்படையாக, Toulouse நகர அரசவழக்கறிஞர் அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் இதே Toulouse நகரில் AstraZeneca தடுப்பூசி போட்டுக்கொண்ட 38 வயதுடைய பெண்மணி, 14 ஆவது நாளில் திடீர் மாரடைப்பில் சாவடைந்திருந்தார். இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு பெண் சாவடைந்துள்ளமை AstraZeneca தடுப்பூசி மீது அவநம்பிக்கை ஏற்படுத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.