⚫🇫🇷பிரான்ஸில் சிறுமி உட்பட மூவர் பரிதாப பலி!

Hérault மாவட்டத்தில் இடம்பெற்ற தீ விபத்தொன்றின் 8 வயது சிறுமி உட்பட மூவர் சாவடைந்துள்ளனர். வெள்ளிக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Agde (Hérault) நகரில் உள்ள வீடு ஒன்றில் நள்ளிரவு 1 மணி அளவில் தீ பரவியுள்ளது. தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர். மிகுந்த போராட்டத்தின் மத்தியில் தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். ஆனால் உள்ளே சிக்கியிருந்த மூவரை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.

நாற்பது வயதுகளையுடைய தம்பதியினர் இருவரும், அவர்களது 8 வயது மகளும் இத் தீ விபத்தில் சாவடைந்துள்ளனர். சடலங்களை தீயணைப்பு படையினர் மீட்டனர். இது தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.