⚫🇫🇷தென் பிரான்ஸில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள்!

ஐரோப்பிய நாடுகளில் வெள்ளம் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது காட்டுத்தீ பரவலும் அச்சுறுத்துகின்றது. தென் பிரான்ஸின் செய்ன்ட் ட்ரொபெஸ் பகுதியில் காட்டுத்தீ பரவுகின்றமையினால் சுற்றுலா பயணிகள் உட்பட ஆயிரக்கணகானவர்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வேகமாக பரவும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த 750 படைவீரர்களும் வாகனங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. நிலவும் அதிகூடிய வெப்ப நிலை நிலவுகின்றமையினாலும் பலத்த காற்று வீசுகின்றமையினாலும் காட்டுத்தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மனித செயற்பாடுகளினால் புவி வெப்பமடைந்துள்ள நிலையில் பல நாடுகள் கடும் வெப்பம் மற்றும் காட்டுத்தீ போன்ற இயற்னை அனர்த்தத்தின் பிடியில் சிக்குண்டுள்ளதாகவும் மேலும் இந்த நிலை அதிகரிக்குமே தவிர குறையாது என சிரேஷ்ட விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். கிரேக்கம்,துருக்கி,ஸ்பெய்ன்,போர்த்துகல்,அல்ஜீரியா மற்றும் மொரோக்கோ போன்ற பல நாடுகள் அண்மையில் காட்டுத்தீயினால் பெரும் அவதியுற்றமை குறிப்பிடத்தக்கது.