பரிசில் இரு பெண்களை பணயக்கைதிகளாக பிடித்து வைத்த்திருந்த ஆயுததாரி கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை நண்பகல் ஆரம்பித்த இந்த பேச்சுவார்த்தை, இன்று காலை வரை (காலை 6.30 மணி நிலவரம்) நீடித்தது. நேற்று இரவு 10.00 மணி அளவில் இரு பெண்களில் ஒருவர் விடுவிக்கப்பட்ட நிலையில், மற்றைய பெண் தொடர்ந்தும் ஆயுதாரியின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளார்.
இரு பெண்களும் தாய்-மகள் என அறிய முடிகிறது. முதல்கட்ட விசாரணைகளில் ஆயுததாரி மனநலம் பாதிக்கப்பட்டிருந்தவர் எனவும், அதற்காக சிகிச்சைகள் பெற்று வந்தவர் எனவும் அறிய முடிகிறது.
இந்நிலையில், சற்று முன்னர் ஆயுததாரி கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் Gérald Darmanin இதனை சற்று முன்னர் அறிவித்தார். இச்சம்பவத்தின் போது எவரும் காயமடையவில்லை எனவும், சிறப்பாக செயற்பட்ட காவல்துறையினருக்கு நன்றி எனவும் உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
- ⚫🇫🇷பிரான்ஸில் மூன்று மாதத்தில் மூன்றாவது தடுப்பூசி! வெளியான அறிவிப்பு!
- ⚫🇫🇷செம்மஞ்சள் எச்சரிக்கையில் ile-de-France!
- ⚫🇫🇷பிரான்ஸ் சுகாதார அமைச்சரின் புதிய திட்டம்! ஜனவரி முதல் ஆரம்பம்!
- ⚫இலங்கையின் ஹோட்டலில் மாணவனுடன் தங்கிய மாணவி! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
- ⚫இலங்கையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு! 3000 கோழிகள் தீக்கிரை!