⚫🇫🇷பிரான்ஸில் 24 மணிநேரத்தை கடந்து தேடுதல் வேட்டை! பொதுமக்களை வீட்டில் இருக்கும் படி வலியுறுத்தல்!

ஆயுததாரி ஒருவரை தேடும் பணி 24 மணிநேரம் கடந்தும் தொடர்கிறது. Lardin-St-Lazare நகர மக்களை வீட்டுக்குள் இருக்கும் படி அந்நகர காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர். Lardin-St-Lazare நகர காட்டுப்பகுதிக்குள் ஆயுதங்களுடன் ஒளிந்துள்ள குறித்த ஆயுததாரியை தேடும் பணி நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இடம்பெற்று வரும் நிலையில், இன்று திங்கட்கிழமை காலை 24 மணிநேரங்களை கடந்தும் தேடுதல் வேட்டை தொடர்கின்றது.

இன்று காலை நிலவரப்படி, காட்டுப்பகுதிக்குள் தொடர்ந்தும் 4 கிலோமீற்றர் சுற்றுவட்டாரத்துக்குள் குறித்த ஆயுததாரி மடக்கி வைக்கப்பட்டுள்ளார் எனவும், குறித்த நபர் அணிந்துள்ள மின்சார கைவிலங்கு மூலம் அவரின் இருப்பிடத்தை அடையாளம் கண்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.
மொத்தமாக 309 ஜொந்தாமினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உலங்குவானூர்தி ஒன்றும் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை, Lardin-St-Lazare பகுதியில் வசிக்கும் பொதுமக்களை அவசியமின்றி வெளியேற வேண்டாம் என பிராந்திய காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.