♦️🇫🇷பிரான்ஸ் மாகாணசபை தேர்தல்! தற்போதைய நிலவரம் என்ன?

மாகாணசபைத்தேர்தலின் முதலாம் கட்ட வாக்குப்பதிவின் மாலை 5 மணிநிலவரம் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது.
மீண்டும் மிக குறைந்த அளவான வாக்குகளே பதிவாகியுள்ளது. நண்பகல் வரை 12.22% வீதமான வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், மாலை 5 மணிவரை 26.72% வீதமான வாக்குகள் மாத்திரமே பதிவாகியுள்ளன. முன்னதாக 2015 ஆம் ஆண்டில் இதே மாலை 5 மணிக்கு 43.01% வீதமும், 2010 ஆம் ஆண்டில் 39.29% வீதமான வாக்குகளும் பதிவாகியிருந்தன. இவ் வருடத்தின் மே மாதத்தில் 47.9 மில்லியன் பேர் வாக்களிக்க தகுதியுடையவர்களாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மாகாணம் ரீதியான வாக்குப்பதிவு வீதங்கள் (மாலை 5 மணி நிலவரம்)

Grand Est: 21.73%

Nouvelle-Aquitaine: 28.71%

Auvergne-Rhône-Alpes: 24.75%

Bourgogne-Franche-Comté: 28.41%

Bretagne: 28.79%

Cente-Val de Loire: 27.76%

Île-de-France: 21.97%

Occitanie: 31.71%

Hauts-de-France: 27.17%

Normandie: 28.14%

Pays de la Loire: 26.63%

Provence-Alpes-Côte d’Azur: 30.64%

Corse: 47.31%