🔴🇫🇷😳90% சத விகிதம் பாதுகாப்பானது ஆக்ஸ்பேட் மருந்து! திகைத்துப் போன பிரான்ஸ்!

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா பிரிந்து விட்டது என்ற ஒரே காரணத்திற்காகவும், மற்றும் பிரித்தானியாவை பழிவாங்கும் நோக்கத்திற்காகவும், ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து ஆக்ஸ்பேட் தடுப்பு மருந்து பாதுகாப்பு அற்றது என்று கூறிவந்தார்கள். அதன் பின்னால் அவர்கள் சொன்ன ஒரே காரணம் என்னவென்றால், ஆக்ஸ்பேட் தடுப்பு மருந்து 11,000 ஆயிரம் பேருக்கு கொடுக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் வெறும் 600 பேர் தான் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள். இதனால் 65 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு ஆக்ஸ்பேட் மருந்தை கொடுக்க முடியாது. அது ஆபத்து என்று இது நாள் வரை ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் கூறி, தற்போது மூக்கை உடைத்துள்ளார்கள். 🇫🇷

இன்றோடு(28) பிரித்தானியாவில் 20 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 12 மில்லியன் மக்கள் ஆக்ஸ்பேட் தடுப்பு மருந்தை எடுத்துள்ளார்கள். இதில் சுமார் 3 மில்லியன் மக்கள் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள். அவர்கள் அனைவரும் நலமாக உள்ளதோடு. கொரோனாவில் இருந்து 90% விகிதம் பாதுகாக்கப்பட்டுள்ளார்கள் என்பது நல்ல விடையம். இது இவ்வாறு இருக்க 1.1 மில்லியன் மக்கள் 70க்கும் மேற்பட்ட மக்கள் ஆக்ஸ்பேட் மருந்தை எடுத்துள்ளார்கள். அவர்களும் நலமாகவே உள்ளார்கள். 🇫🇷

இதனூடாக 65 வயது, 70 வயது 75 மற்றும் 85 வயது என எல்லா வயது மக்களுக்கும் ஆக்ஸ்பேட் மருந்து நன்றாக வேலை செய்ய ஆரம்பித்து விட்டது என்பது தரவு ஊடாக தற்போது நிரூபனமாகியுள்ளது. இதனை அடுத்து இந்த மருந்து பாதுகாப்பு அற்றது என்று கூறிவந்த ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் தற்போது வாய் அடைத்து நிற்கிறது. Source CNN: A single jab of either Pfizer or Oxford-AstraZenca vaccine is giving 90 PER CENT protection in huge boost to Britain’s world-beating rollout… but don’t tell Merkel and Macron that the Oxford one works better on over-70s. 🇫🇷

கடந்த 24 மணி நேரத்தில் பிரித்தானியாவில் கொரோனா தொற்று 60%விகிதத்தால் குறைவடைந்துள்ளதோடு. வைத்தியசாலை செல்லும் மக்களின் தொகை 75% சத விகிதத்தால் குறைவடைந்துள்ளது. இறப்பு விகிதம் 300 என குறைவடைந்துளது. மே மதம் அளவில் , பிரித்தானியா கொரோனா இல்லாத ஒரு சுதந்திர நாடாக இருக்கும். ஆனால் ஏனைய ஐரோப்பிய நாடுகள், சிக்கி தவிக்கும் நிலையில் தான் இருக்கும். 🇫🇷

தற்போது பிரித்தானியாவின் பவுண்டுகள் உச்சத்தை எட்டிக் கொண்டு இருப்பதோடு, யூரோ நாணயம் சரிவை எதிர்கொண்டுள்ளது. ஒரு சிறந்த உதாரணம் ஆகும். சற்று முன் கிடைத்த தகவலின் அடிப்படையில், இனி ஒன்றுமே செய்ய முடியாத என்ற நிலையில், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் பிரித்தானியாவின் ஆக்ஸ்பேட் தடுப்பு மருந்தை அங்கிகரிக்க உள்ளது. 🇫🇷