⚫🇫🇷பிரான்ஸில் திருடர்கள் கைவரிசை! வெளியான தகவல்!

மகிழுந்துகளுடன் வரும் l’ordinateur de bord கணணிகளை திருடிய ஐவர் கொண்ட குழு ஒன்றை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைதான அனைவரும் 17 தொடக்கம் 20 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், குறிப்பிட்ட சில நாட்களுக்குள் 150 மகிழுந்துகளில் உள்ள l’ordinateur de bord கணணிகளை திருடியுள்ளனர்.

Loire மற்றும் Rhône பிராந்தியங்களை குறிவைத்து இவர்கள் திருட்டில் ஈடுபட்டுள்லனர். மொத்தமாக திருடப்பட்ட கணணிகளின் மதிப்பு 1.8 மில்லியன் யூரோக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மன் நாட்டு நிறுவனத்தின் மகிழுந்துகளே குறிவைத்து திருடப்பட்டுள்ளது.

கைதான ஐவரில் ஒருவர் ஜெர்மனியர் எனவும் அறிய முடிகிறது. இந்த திருட்டில் மூளையாக செயற்பட்ட முக்கிய குற்றவாளி, நாளை திங்கட்கிழமை நீதிமன்றத்தில் முன்நிறுத்தப்பட உள்ளார்.