⚫🇫🇷பிரான்ஸ் பொது போக்குவரத்துக்களில் திருட்டு! முதலிடம் பிடித்த மாகாணம்?

பொது போக்குவரத்துக்களில் இடம்பெறும் திருட்டுக்களில் இல் து பிரான்ஸ் மாகாணம் முதலிடத்தில் உள்ளது. இல் து பிரான்சுக்குள் தினமும் 1.3 மில்லியன் பயணிகள் பொது போக்குவரத்தினை பயன்படுத்துகின்றனர்.

அதேவேளை, அதிகளவு திருட்டுக்கள் இடம்பெறும் மாகாணமாகவும் இல் து பிரான்சே உள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டில் 116.430 பயணிகள் திருட்டுக்கு ஆளாகியுள்ளனர். பிரான்சில் பதிவாகும் மூன்றில் இரண்டு பொது போக்குவரத்து திருட்டுக்கள் இல் து பிரான்சிலேயே பதிவாகின்றது.

இந்த தரவுகளை Service statistique ministériel de la sécurité intérieure (SSMSI) வெளியிட்டுள்ளது. இந்த திருட்டுக்களில் அதிகம் பாதிக்கப்படுவது 18-29 வயதுக்குட்பட்ட இளம் பயணிகள் எனவும் தெரியவந்துள்ளது.