🇫🇷கொரோனாவின் புதிய தாக்கம்! பிரித்தானியாவுடன் தொடர்பைத் துண்டிக்குமா பிரான்ஸ்?

பிரித்தானியாவில் கொரோனா வைரசின் புதிய வடிவத் தொற்று பெரியளவில் அதிகரித்ததையடுத்து, லண்டன் உட்படப் பிரித்தானியாவின் பல பகுதிகள் கடுமையான உள்ளிருப்பிற்குள் இன்று முதல் கொண்டுவரப்படுகின்றது. இதனால் பிரித்தானியாவிற்கான அனைத்து விமானங்களையும் நிறுத்துவதாக, நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் அரசுகள் அறிவித்துள்ளன.

இதனால் பிரான்சும் அத்தகைய முடிவை எடுப்பதற்குத் தள்ளப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த முடிவுகள் இன்னமும் அறிவிக்கப்படாமல், இதற்கான கலந்துரையாடலில் பிரான்ஸ் ஈடுபட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவுகளும் பிரான்சின் முடிவுகளில் தாக்கம் ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த முடிவுகளைப் பிரான்ஸ் எடுக்கத் தாமதிப்பது, பிரான்சில் கொரோனா ஆபத்தை அதிகரிக்கும் மோசமான செயல் எனவும் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.