🇫🇷🦠பிரான்ஸின் இன்றைய கொரோனா நிலவரம்! தொடரும் அபாயம்!

தொடர்ந்தும் கொரோனா ஆபத்தானது நீங்காத நிலையில் மீண்டும் கொரோனா சாவுககள் அதிகரித்துள்ளன. சாவுகளின் எண்ணிக்கையும் கொரோனாத் தொற்றும் மீண்டும் அதிகரித்தே செல்கின்றது. கடந்த 24 மணி நேரத்திற்குள் 22.848 பேரிற்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தொற்றாளர்களின் எண்ணிக்கை 26.784 ஆக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. கடந்த 24 மணி நேரத்திற்குள் வைத்தியசாலைகளில் 346 பேர் சாடைந்துள்ளனர்.

இதனால் மொத்தச் சாவுகள் 71 998 ஆக உயர்ந்துள்ளது. 25.735 கொரோனத் தொற்று நோயாளிகள் தற்சமயம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைவடையாமல் அதிகரித்த வண்ணமே உள்ளன. 2.876 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். நாளிற்கு நாள் இது அதிகரித்தே செல்கின்றது. பிரான்சில் பிரித்தானிய வைரசின் தொற்றுக்கள் அதிகரிப்பது ஆபத்தின் உச்சமாக உள்ளது.