⚫🇫🇷பிரான்ஸில் முடிவுக்குக் வரும் முக்கிய தொடருந்து சேவையின் ஒரு பகுதி!

மிக வெற்றிகரமான குறைந்த கட்டண தொடருந்து சேவையான Ouigo, தனது முதலாவது தோல்வியை சந்தித்துள்ளது.
Paris-Nancy நகரங்களுக்கு இடையே இயங்கி வரும் Ouigo சேவை நிறுத்தப்பட உள்ளதாக SNCF அறிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதியுடன் இந்த சேவை நிறுத்தப்பட உள்ளது. Paris-Nancy நகரங்களிடையே பயணிக்கும் இந்த தொடருந்தில் ஆரம்பித்த காலம் தொடங்கி இப்போது வரை போதுமான பயணிகள் பயணித்ததில்லை என அறிய முடிகிறது. தொடருந்து இயக்குவதற்குண்டான செலவை விட மிக குறைந்த வருவாயே ஈட்ட முடிவதால் இந்த சேவை முடிவுக்கு கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் வரத்து குறைவாக உள்ளபோதும், இந்த சேவை பலருக்கு பயணுள்ளதாகவே உள்ளது.

குறிப்பாக Nancy நகர மக்கள் பரிசுக்கு வந்து செல்வதற்கு மிக குறைவான கட்டணம் செலுத்தக்கூடிய சேவையாக இது இருந்த நிலையில், தற்போது இந்த சேவை நிறுத்தம் Nancy நகர மக்களை கோபத்துக்குள்ளாக்கியுள்ளது. இது தொடர்பாக பலர் சமூகவலைத்தளங்களில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.