⚫🇫🇷மாபெரும் தொற்றை எதிர்நோக்கவுள்ள பிரான்ஸ்!

பிரான்சில் ஒரு நாளைக்கு சுமார் 100,000 புதிய COVID-19 பாதிப்புகள் விரைவில் ஏற்படக்கூடும் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஆலிவர் வேரன் (Olivier Véran) இன்று தெரிவித்தார்.

மேலும், புதிய வருடத்தின் ஜனவரி ஆரம்பத்தில் பிரான்சில் COVID-19 இன் ஆதிக்க விகாரமாக Omicron மாறுபாடு இருக்கும் என்றும் குறிப்பிட்டார். இதேவேளை, ஒமிக்ரோன் மாறுபாடு பிரான்சில் 20% புதிய COVID-19 நோய்த்தொற்றுகளுக்கு காரணமாகிறது.

குறிப்பாக பாரிஸ் பிராந்தியத்தில் இது வேகமாக பரவுகிறதாக பிரெஞ்சு அரசாங்க செய்தித் தொடர்பாளர் கேப்ரியல் அட்டல் (Gabriel Attal ) முன்னதாக செய்தியாளர்களிடம் கூறினார் இதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில், பிரான்ஸ் நாட்டில் 73,000 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.