⚫🇫🇷பிரான்ஸில் மின்னல் வேகத்தில் ஆரம்பித்துள்ள ஐந்தாம் தொற்றலை!

ஐந்தாம் தொற்று அலை மின்னல் வேகத்தில் ஆரம்பிக்கின்றதாக அரச ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அரச ஊடக பேச்சாளர் கேப்ரியல் அத்தால், இன்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.

அங்கு வைத்தே இதனை அவர் தெரிவித்தார். “ஐந்தாம் தொற்று அலை மின்னல் வேகத்தில் ஆரம்பித்துள்ளது!” என தெரிவித்த அவர், “ஒரே வாரத்தில் தொற்று 80% வீதத்தால் அதிகரித்துள்ளது. நாள் ஒன்றுக்கு 10, 000 பேருக்கு கண்டறியப்பட்ட தொற்று, தற்போது 18,000 பேருக்கும் அதிகமாக பரவுகின்றது.

பிரான்சின் மொத்த தொற்று வீதம் ஒவ்வொரு 100,000 பேருக்கும் 164 பேர் ஆகும். கடந்த வார ஆரம்பத்தில் இது 100 பேராக இருந்தது!” என கேப்ரியல் அத்தால் தெரிவித்தார்.