⚫🇫🇷பிரான்ஸில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா தொற்று!

ஞாயிற்றுக்கிழமை இரவு (பெப்ரவரி 21) ஆம் திகதி வெளியான தகவல்களின் படி, கடந்த 24 மணிநேரத்தில் 22,046 பேருக்கு புதிதாக கொவிட் 19 தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இதுவரை பிரான்சில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,605,181 ஆக உயர்வடைந்துள்ளது. தற்போது தொற்று எண்ணிக்கையும் 6.1% இல் இருந்து 6.2% வீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த ஏழு நாட்களில் 9,362 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1,807 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாவு எண்ணிக்கை ஓரளவு வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 160 பேர் (மருத்துவமனைகளில்) சாவடைந்துள்ளனர். இதுவரை மொத்தமாக 84,306 பேர் சாவடைந்துள்ளனர். இவர்களில் 59,826 பேர் மருத்துவமனைகளில் சாவடைந்துள்ளனர்.