♦️🇫🇷பிரான்ஸில் மீண்டும் பயங்கரம்! ஒருவர் பலி!

நேற்று வெள்ளிக்கிழமை இரவு மகிழுந்து தரிப்பிடம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். Saint-Gratien (Val-d’Oise ) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு தரைகீழ் தளத்தில் உள்ள வாகன தரிப்பிடத்தில் இச்சம்பவம் இரவு 10.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.

33 வயதுடைய ஒருவர், தனது மனைவியுடன் மகிழுந்தில் வந்துள்ளார். அப்போது அங்கு காத்திருந்த ஆயுததாரி ஒருவன் மகிழுந்தை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளான். இதில் பலத்த காயமடைந்த குறித்த நபர் சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளார். அவரது மனைவி இலேசான காயத்துடன் உயிர்பிழைத்துள்ளார். துப்பாக்கிச்சூட்டுக்குப் பின், ஆயுததாரி அங்கிருந்து உந்துருளியில் தப்பிச் சென்றுள்ளான். அவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.