⚫🇫🇷செம்மஞ்சள் எச்சரிக்கையில் ile-de-France!

இன்று வெள்ளிக்கிழமை Île-de-France இன் வீதிகளில் பலத்த போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஸ்துமஸ் விடுமுறை காரணமாக Île-de-France இல் இருந்து வெளிச்செல்லும் வீதிகளில் (des départs) பலத்த போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனவும், மாலை 4 மணிக்கு 300 கி. மீ தூரத்துக்கும் அதிகமாக வாகன நெரிசல் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Île-de-France இல் இருந்து வெளியேறுபவர்கள், காலை 10 மணிக்கு முதல் பயணிக்கவும் என வீதி கண்காணிப்பாளர்களான Bison Futé பரிந்துரை செய்துள்ளனர். இன்று மட்டுமில்லாது, நாளை சனிக்கிழமை, மறுநாள் ஞாயிற்றுக்கிழமையும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.