🇫🇷🚆பிரான்ஸில் தண்டவாளத்தில் பாய்ந்த நபர்!

இன்று காலை பரிசில் இடம்பெற்ற விபத்து ஒன்றை அடுத்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. RER D மற்றும் RER D ஆகிய சேவைகளே இவ்வாறு தடைப்பட்டுள்ளன. இன்று புதன்கிழமை காலை Châtelet-les-Halles தொடருந்து நிலையத்தில் நபர் ஒருவர் தொடருந்துக்குள் சிக்குண்டுள்ளார். தீயணைப்பு படையினர் மூலம் பெற்றுக்கொண்ட தகவல்களின் படி, காலை 8.15 மணிக்கு குறித்த நபர் நடைமேடையில் இருந்து திடீரென தண்டவாளத்துக்குள் பாய்ந்துள்ளார்.

இது தற்கொலை செய்துகொள்ளும் நோக்கமில்லை எனவும், எதோ ஒரு பொருளை கைப்பற்றும் எண்ணத்துடன் தண்டவாளத்தில் பாய்ந்துள்ளதாகவும், அதன் போது தொடருந்தில் மோதுண்டு பலத்த காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்த நபர் ஒரு வீடற்றவர் (SDF) எனவும், விபத்தை அடுத்து RER D சேவைகள் இரு திசைகளிலும் RER B சேவைகளின் ஒரு பகுதியும் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.