🇫🇷பிரான்ஸில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிர் இழப்பு…..!!!

யாழ்ப்பாணம் மண்டைதீவுப் பகுதிகளைச் சேர்ந்த செல்லத்துரை மற்றும் வேலாயுதபிள்ளை ஆகியோரின் பேர்த்தியான 22 வயதுடைய கார்த்திகா குலேந்திரா பிரான்ஸில் மருத்துவத்துறையில் கல்வி பயிலும் மாணவி இம்மாதம் எட்டாம் ஆம் திகதி அன்று உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

மற்றும் யாழ்ப்பாணம் மந்துவில் வடக்கு கொடிகாமத்தைச் சேர்ந்த 18 வயதுடைய சினேகா சந்திரராசா பிரான்ஸில் மருத்துவத்துறையில் கல்வி பயிலும் மாணவி கடந்த பதின்மூன்றாம் திகதியன்று அகால மரணமடைந்துள்ளார்.

இவ்வாறு பிரான்சில் வைத்திய பட்டப்படிப்பினை மேற்கொண்டு வந்த யுவதிகள் இருவரின் உயிரிழப்பின் பின்னணி தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பிரான்ஸில் மருத்துவ பட்டப்படிப்பினை மேற்கொண்டு வந்த யுவதிகள் இருவரின் உயிரிழப்பின் பின்னணி தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.