பிரான்ஸ் உள்ளிருப்பு! புதிய கட்டுப்பாடுகளை அறிவிக்க உள்ளஅரசாங்கம்!

கடந்த சனிக்கிழமை முதல் அறிவிக்கப்பட்ட உள்ளிருப்புக் கட்டுப்பாடுகள், முக்கியமாக இல்-து-பிரான்சில், பொதுமக்களிற்கு மட்டுமல்ல அரசாங்கத்திற்கும் பெரும் குழப்பமாகவே உள்ளது.

வெளியே செல்வதற்கான அத்தாட்சிப் பத்திரங்களை உருவாக்குவதில் கூட பெரும் சிக்கல் உருவாகி உள்ளது. ஜனாதிபதி பொருளாதாரம் என்றும், பிரதமர் மக்களின் பாதுகாப்பு என்றும், அவர்களிற்கு இடையேயே பெரும் முரண் தோன்றியுள்ளது.

பரிஸ் உட்பட இல்-து-பிரான்சில் மக்கள் வெளியே செல்வதற்குத் தடையில்லை என்று ஜனாதி அறிவித்துள்ள நிலையில், பகல் வேளைகளில் அனைவரும் வெளியே கூடுவதால், தொற்று விகிதம் மிகவும் அதிகமாகி உள்ளது.

இதனால் மீண்டும், உள்ளே என்ன கட்டுப்பாடுகள், வெளியே என்ன கட்டுப்பாடுகள் என்பதை “Dedans avec les miens, dehors en citoyen” என்ற அடிப்படையில் மீண்டும் வரையறை செய்து அறிவிக்க உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.