⚫🇫🇷பிரான்ஸில் பார்பிகியூ உணவால் ஏற்பட்ட பரிதாப நிலை!

பார்பிகியூ உணவு தயாரிக்கும் முயற்சி ஒன்று தோல்வியில் முடிந்த நிலையில், 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Chaumontel (Val-d’Oise) நகரில் இச்சம்பவம் டிசம்பர் 18 ஆம் திகதி சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. இங்குள்ள வீடு ஒன்றில் 4 மற்றும் 9 வயதுடைய இரு சிறுவர்கள் உட்பட மேலும் 10 பேர் இணைந்து பார்பிகியூ உணவு தயாரிக்க முற்பட்டுள்ளனர்.

காற்று வெளியேறும் ventilation வசதியற்ற வீட்டில் இடம்பெற்ற இந்த உணவு தயாரிக்கும் முயற்சியின் முடிவில், வீட்டுக்குள் விசவாயு பரவி ( Monoxyde De Carbone) மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

உடனடியாக தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த 21 தீயணைப்பு படையினர், அவர்களை மீட்டு மூச்சுத்திணறலுக்கு உள்ளான அனைவரையும் மீட்டு Gonesse மற்றும் Beaumont-sur-Oise நகர அவசரப்பிரிவு மருத்துவமனையில் சேர்த்தனர்.

வீட்டில் பாதுகாப்பற்ற முறையில் பார்பிகியூ தயாரிக்கும் முயற்சியில் இவ்வருடத்தில் பிரான்சில் 100 க்கும் மேற்பட்டவர்கள் சாவடைந்துள்ளதாகவும், 3,000 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அரசு வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.