🔴🇫🇷இல் து பிரான்ஸில் ஊரடங்கு சாத்தியமா? மக்ரோனின் அதிரடி அறிவிப்பு!

இல் து பிரான்சுக்குள் ஊரடங்கு கொண்டுவருவது சாத்தியமில்லை என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார். இன்னும் சில மணிநேரங்களில் பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோர் ஊடக சந்திப்பு ஒன்றை நிகழ்த்த உள்ளனர். இதில் இல் து பிரான்சுக்குள் கொண்டுவரப்பட உள்ள புதிய கட்டுப்பாடு தொடர்பாக அறிவிக்க உள்ளனர்.

இல் து பிரான்சுக்குள் முழு நேர ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்ட நிலையில், வார இறுதி நாட்களில் ஊரடங்கு நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என பிரதமர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இல் து பிரான்சுக்குள் ஊரடங்கு கொண்டுவருவது மிக சிரமானது. ஏனைய பிராந்தியங்கள் போன்று வார இறுதி நாட்களில் கூட ஊரடங்கு கொண்டுவர முடியாது. வெள்ளிக்கிழமை மாலையில் இருந்து திங்கட்கிழமை காலைவரை ஊரங்கு என்பது சாத்தியமில்லாதது! என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்று அறிவித்துள்ளார். இதனால், இன்று மாலை 7 மணிக்கு பிரதமர் இது தொடர்பாக அறிவிப்பார் எனும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.