⚫🇫🇷விசேட செய்தி! பிரான்ஸில் மேலும் மூன்று மாவட்டங்களில் உள்ளிருப்பு!

தற்போது 16 மாவட்டங்களில் உள்ளிருப்பு நடைமுறையில் உள்ள நிலையில், மேலும் மூன்று மாவட்டங்களுக்கு இந்த உள்ளிருப்பு அதிகரிக்கப்பட உள்ளதாக அறிய முடிகிறது. இன்று நண்பகல் இடம்பெற்ற அமைச்சர்களுக்கான மாநாட்டில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இல் து பிரான்சின் எட்டு மாவட்டங்களோடு, மேலும் எட்டு மாவட்டங்கள் என மொத்தம் 16 மாவட்டங்களில் தற்போது உள்ளிருப்பு நடைமுறையில் உள்ளன. இந்த உள்ளிருப்பானது மேலும் மூன்று மாவட்டங்களான Rhône, Aube மற்றும் Nièvre ஆகிய மாவட்டங்களுக்கும் நீட்டிக்கப்பட உள்ளன. இத்தகவலை சற்று முன்னர் அரச ஊடக பேச்சாளர் Gabriel Attal அறிவித்துள்ளார்.