🔴🇫🇷பிரான்ஸ் வேலையில்லாதோர் உதவித்தொகை! வெளியான முக்கிய அறிவிப்பு!

வேலையில்லாதோர் தங்களுக்காக உதவித்தொகையை பெற்றுக்கொள்ள புதிய படிவம் ஒன்றை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Pôle emploi இல் உதவித்தொகை பெற்றுக்கொள்ளும் ஒவ்வொருவரும், அல்லது புதிதாக தங்களது பெயரினை பதிந்துகொள்ள முனைபவர்கள் அனைவரும் தங்களது முன்னாள் முதலாளிகளின் கையெழுத்திட்ட புதிய படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். இந்த புதிய படிவம் Pôle emploi இணையத்தளத்தில் இருந்து தரவிறக்கி, கையெழுத்திட்டு ”உதவித்தொகை நன்மைகளை பெற இவர் தகுதியானவர்” என உறுதிப்படுத்தினால் மாத்திரமே உங்களது பெயர் Pôle emploi இல் இணைத்துக்கொள்ளப்படும்.


உங்களுக்கும் உங்களது முன்னாள் முதலாளிக்குமான (ஒப்பந்தம்) contrat நிறைவுக்கு வந்துள்ளதை அவர் உறுதி செய்திருக்க வேண்டும். முன்னதாகவே இந்த நடைமுறை இருந்தபோதும், தற்போது புதிய ‘மொடல்’ பத்திரத்தில் இந்த ‘ஆவணம்’ கொடுக்கப்படவேண்டும். பழைய ஆவணங்களில் ‘ஊழிய்ர்களின் உரிமைகளை’ கணக்கிடுவதில் பல சிக்கல்கள் உள்ள நிலையில், தற்போது அந்த குறைகளை களைந்து இந்த புதிய படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது.
Pôle emploi இல் தங்களது பெயரினை பதிந்து உதவித்தொகை பெற்றுக்கொண்டுவரும் அனைவருக்கும் இந்த புதிய விதி பொருந்தும். புதிய மாதமான ஜூன் 1 (நேற்று) இல் இருந்து இந்த புதிய விதி நடைமுறைக்கு வந்துள்ளது.