🔴🇫🇷பிரான்ஸில் சில வாகனங்களுக்கு இன்று முதல் தடை! மக்களே அவதானம்!

இன்று ஜூன் 1 ஆம் திகதி முதல் பரிஸ் உட்பட 79 நகரங்களில் குறிப்பிட்ட சில வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. La Zone à faible émission (ZFE) விதிகளுக்கு அமைய அதிக சுற்றுச்சூழல் மாசடைவை ஏற்படுத்தும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுகின்றன. அதன்படி, Crit’air 4 மற்றும் Crit’air 5 பிரிவுக்குட்பட்ட வாகனக்களே தடைக்கு உள்ளாகின்றன. குறிப்பாக A86 நெடுஞ்சாலையில் பயணிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளன.

  • பேருந்துகள், பயணிகளை ஏற்றிச்செல்லும் கோச் பேருந்துகள், கனரக வானங்களுக்கு வாரத்தின் ஏழு நாட்களும் காலை 8 ம்ணியில் இருந்து இரவு 8 மணி வரை பயணிக்க தடை.
  • தனியார் வாகனங்கள், மகிழுந்துகள், சிறிய பயணிகள் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் போன்ற வாகனங்கள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8 மணியில் இருந்து இரவு 8 மணி வரையும் பயணிக்க தடை.

இந்த தடை பரிஸ் உட்பட Hauts-de-Seine , Seine-Saint-Denis ம்ற்றும் Val-de-Marne மாவட்டங்களைச் சேந்த 79 நகரசபை பகுதிகளுக்கு நடைமுறைக்கு வருகின்றன. (மேலேயுள்ள புகைப்படத்தில் விபரங்களை காணலாம்)
இந்த விதியை மீறி பயணிப்போருக்கு 68 யூரோக்களில் இருந்து தண்டப்பணம் அறவிடப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.