♦️🇫🇷😲பிரான்ஸில் முடிவுக்கு வராத விசித்திர வழக்கு! 35 வருடத்திற்கு பின் புதிய திருப்பம்!

35 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன் பெண் ஒருவரை தேடும் பணி தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சில விசித்திர வழக்குகள் எத்தனை வருடங்களை கடந்தாலும் முடிவுக்கு வராது. அதுபோன்ற ஒரு வழக்கு தான் Marie-Thérèse Bonfanti இன் வழக்கு. இவர் 1986 ஆம் ஆண்டின் மே மாதத்தில் Isère நகரில் வசித்த இவர் திடீரென காணாமல் போயிருந்தார். பின்னர் அவரை தேடும் பணிகள் இடம்பெற்று வந்தது. ஆனால் அந்த முயற்சி அப்போது பலனளிக்கவில்லை. அவர் தொடர்பான எந்தவித தகவல்களையும் அறிய முடிவில்லை.

தற்போது, 35 வருடங்களின் பின்னர் இந்த வழக்கு மீண்டும் விசாரணைகளுக்கு வந்துள்ளது. Marie-Thérèse Bonfanti இன் குடும்பத்தினர் மீண்டும் இந்த வழக்கை ஆரம்பித்துள்ளனர். மரபணு சான்றுகளை அடிப்படையாக கொண்டு Marie-Thérèse Bonfanti இனை தேடும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், விசாரணைகள் அதன் போக்கில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.