நேற்று இரவு கடற்கரை ஒன்றில் இடம்பெற்ற விருந்து விழா ஒன்று வன்முறையில் சென்று முடிந்துள்ளது.
Vallauris (Alpes-Maritimes) நகரில் உள்ள Golfe-Juan கடற்கரை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு விருந்து ஒன்று இடம்பெற்றது. பலர் கலந்துகொண்ட இந்த விருந்து, அதிகாலையில் வன்முறையாக மாறியது. காலை 5 மணிக்கு ஜொந்தாமினர் அழைக்கப்பட்டனர். avenue de la liberté வீதியில் அப்போதும் பலத்த மோதல் இடம்பெற்றுக்கொண்டிருந்துள்ளது.
படுகாயமடைந்த ஆறு பேரினை தீயணைப்பு படையினர் மருத்துவமனை அழைத்துச் சென்றனர். அவர்களில் ஒருவர் சாவடைந்துள்ளார். கத்திக்குத்துக்கு இலக்காகியே அவர் சாவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருவர் உயிருக்கு போராடி வருகின்றார். இந்த வன்முறை தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர். கிட்டத்தட்ட 200 பேர்வரை இந்த விருந்து விழாவில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ⚫🇫🇷பிரான்ஸில் மூன்று மாதத்தில் மூன்றாவது தடுப்பூசி! வெளியான அறிவிப்பு!
- ⚫🇫🇷செம்மஞ்சள் எச்சரிக்கையில் ile-de-France!
- ⚫🇫🇷பிரான்ஸ் சுகாதார அமைச்சரின் புதிய திட்டம்! ஜனவரி முதல் ஆரம்பம்!
- ⚫இலங்கையின் ஹோட்டலில் மாணவனுடன் தங்கிய மாணவி! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
- ⚫இலங்கையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு! 3000 கோழிகள் தீக்கிரை!