⚫🇫🇷பிரான்ஸ் குடும்ப வன்முறை! வெளியான அதிர்ச்சி புள்ளி விபரம்!

குடும்ப வன்முறைக்கு உள்ளாகும் பெண்களின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டில் 10% வீதத்தால் அதிகரித்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் 159, 400 பேர் குடும்ப வன்முறைக்கு ஆளாகியுள்ளனர். இது 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10% வீதத்தால் அதிகமாகும்.

இவர்களில் 87% வீதமானவர்கள் (139, 200 பேர்) பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில் 146 பெண்கள் குடும்ப வன்முறையில் கொல்லப்பட்டுள்ளனர். 2020 ஆம் ஆண்டில் 102 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

2019 ஆம் ஆண்டில் பெண்கள் மீது பாலியல் பலாத்காரம் மேற்கொள்ளப்பட்டதாக 5,500 வழக்குகள் பதிவாகியுள்ளன. இவகளில் 5,400 பெண்கள் தங்கள் முன்னாள் கணவர்/ காதலரால் பாலியல் பலாத்காரம் மேற்கொண்டதாக புகார் அளித்துள்ளனர்.