🔴🇫🇷இல் து பிரான்ஸின் வார இறுதி உள்ளிருப்பு! மாகாண முதல்வரின் அதிரடி!

இல் து பிரான்சுக்குள் வார இறுதி நாட்களில் உள்ளிருப்பு கொண்டுவருவது தமக்கு சம்மதம் என மாகாண முதல்வர் தெரிவித்துள்ளார். இல் து பிரான்சுக்குள் கொரோனா தொற்று உச்சத்தை அடைந்துள்ள நிலையில், ஊரடங்கு அல்லது உள்ளிருப்பு கொண்டுவரப்படுவது தொடர்பாக இன்று பிரதமர் அறிவிக்க உள்ளார். அநேகமாக வார இறுதி நாட்களில் (சனி, ஞாயிறு) இல் து பிரான்சுக்குள் உள்ளிருப்பு கொண்டுவரப்படுவதற்கு சாத்தியம் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இல் து பிரான்ஸ் மாகாண முதல்வர் Valérie Pécresse தெரிவிக்கும் போது, “முழுதான உள்ளிருப்பு கொண்டுவரப்படுவதற்கு பதிலாக வார இறுதி நாட்களில் கொண்டுவரப்படுவது வரவேற்கத்தக்கது!” என குறிப்பிட்டார். தடுப்பூசிகள் போடுவதை அதிகரிப்பதே மிக அவசியமானதாகும் எனவும் Valérie Pécresse மேலும் தெரிவித்தார்.