♦️🇫🇷பிரான்ஸில் சர்ச்சைக்குரிய வாசகத்தால் பதற்றம்!

தடுப்பூசிகள் நிலையம் ஒன்றில், தடுப்பூசிக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தடுப்பூசி போட வந்தவர்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டது. Nice மாவட்டத்தின் Las Platas பகுதியில் தடுப்பூசி மையம் ஒன்று அமைக்கப்பட்டு, நீண்ட நாட்களாக தடுப்பூசி போடப்பட்டு வரப்பட்டது. திடீரென புதன்கிழமை இங்கு, தடுப்பூசிக்கு எதிரான வாசகங்கள் சில விரோதிகளால் எழுதப்பட்டது.


தடுப்பூசி கொல்கிறது! உங்களால் வெட்க்கப்படுகின்றோம்!’ உள்ளிட்ட வார்த்தைகளும், சில தகாத வார்த்தைகளும் உபயோகப்படுத்தப்பட்டு எழுதப்பட்டது. பின்னர் மறுநாள் (நேற்று) காலை இங்கு தடுப்பூசி போட வந்திருந்தவர்களிடையே இந்த வாசகம் குழப்பத்தை ஏற்படுத்தியது. சிலர் திரும்பிச் சென்றதாகவும் அறிய முடிகிறது. பின்னர் உடனடியாக இந்த வாசகங்கள் அழிக்கப்பட்டது. தடுப்பூசிகள் மீண்டும் போட ஆரம்பிக்கப்பட்டது.