🔘🇫🇷பிரான்ஸில் வேலை தேடுபவர்களில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சி!

கடந்த ஜூன் மாதத்தோடு ஒப்பிடுகையில் வேலை தேடுவோரின் எண்ணிக்கை கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. வேலை தேடுவோரில் A பிரிவைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையே வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தோடு ஒப்பிடுகையில் ஜூலை மாதத்தில் 1.6% வீதத்தால் இந்த எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது.


அதேவேளை, கடந்த வருடம் (2020) ஜூலையுடன் ஒப்பிடுகையில் 11.1% வீதத்தால் இந்த எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது. A பிரிவில் (category A) பதிவு செய்துகொண்டவர்களில் மாத்திரமே இந்த வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
தற்போது அனைத்து பிரிவுகளையும் சேர்த்து 5.927 மில்லியன் பேர் தங்களை வேலையில்லாதோர் பட்டியலில் இணைத்துள்ளனர். இத்தகவலை இன்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சு வெளியிட்டுள்ளது.