♦️🇫🇷✈️பிரான்ஸில் விழுந்து நொருங்கிய விமானம்!

இன்று சனிக்கிழமை ஒரு சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் சாவடைந்துள்ளனர். இன்று நண்பகல் Lille மாவட்டத்தில் உள்ள Bondues விமான நிலையத்தில் இருந்து மூவருடன் பயணித்த சிறிய ரக விமானம் Wambrechies நகரில் விழுந்து விபத்துக்குள்ளானது.

உடனடியாக விமானம் தீப்பிடித்து எரிந்துள்ளது.
இயந்திர கோளாறு காரணமாக இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில், விமானத்தில் பயணித்த மூவரும் சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளனர்.
விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.