♦️🇫🇷😭பிரான்ஸில் சோகத்தில் முடிந்த விருந்து விழா!

ஆறாவது தளத்தில் இருந்து விழுந்த ஒருவர் சாவடைந்துள்ளார். பரிசில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பரிஸ் 16 ஆம் வட்டாரத்தின் rue Jean Giraudoux வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள வீடு ஒன்றில் விருந்து விழா ஒன்று இடம்பெற்றுக்கொண்டிருந்தது. அதில் கலந்துகொண்ட 23 வயதுடைய ஒருவர், விருந்தின் இடையில் குறித்த கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு ஏறியுள்ளார்.

துரதிஷ்ட்டவசமாக அவர் அங்கிருந்து தவறி விழுந்துள்ளார். அதிகாலை 3 மணி அளவில் உதவிக்குழுவினர் அழைக்கப்பட்டனர். விரைந்து வந்த உதவிக்குழுவினர், துரிதமாக செயற்பட்டபோதும் அவரை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. அதிகாலை 3.19* மணி அளவில் அவர் சாவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. உடற்கூறு பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றது.