🔴🇫🇷🦠பிரான்ஸில் கண்டறியப்பட்ட புதியவகை கொரோனா! அச்சத்தில் மக்கள்!

கொரோனா வைரசின் பிரிவுகளான பிரித்தானிய மற்றும் தென்னாப்பிரிக்க வைரஸ் கண்டறியப்பட்டதை அடுத்து தற்போது மேலும் ஒரு புதிய கொரோனா வைரஸ் பிரான்சில் கண்டறியப்பட்டுள்ளது.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த புதிய பிரிவு கொரோனா வைரசே தற்போது கண்டறியப்பட்டுள்ளது. Haute-Savoie நகரில் இருவருக்கு புதிதாக இந்த புதியவகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்தவாரத்தில் Var மாவட்டத்தில் நான்கு பிரேசில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த வாரத்தில் மேலும் இருவருக்கு (முந்தைய நபர்களுடன் தொடர்பில் இல்லாத) இந்த கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே Haute-Savoie நகரில் தான் முதன் முதலாக பிரித்தானிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.