⚫🇫🇷முடக்கியது பிரான்ஸ் வீதிகள்! தொடரும் போராட்டம்!

பிரான்சில், முக்கியமாக இல்-து-பிரான்சின் வேக வழிச்சாலைகளில் (voie rapide) வாகனங்களிற்கிடையே, வேக ஒழுங்கைகளிற்கிடையே (inter-files) உந்துருளிகளைச் செலுத்துவது, பெப்ரவரி முதலாம் திகதி முதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தடையை விதித்த இல்-து-பிரான்சுடன் இணைந்து, Bouches-du-Rhône, Gironde, Rhône ஆகிய மாவட்டங்களும் இந்தத் தடையை விதித்துள்ளன.

இந்தத் தடையை எதிர்த்து, பிரான்சின் உந்துருளிச் சாரதிகளின் சம்மேளனமான Fédération française des motards இன்று சனிக்கிழமை பிரான்சின் பெரு நகரங்களில் வீதி முடக்கற் பேராட்டத்தை அறிவித்துள்ளது. பரிசில் பகல் 12 மணியிலிருந்து Porte Dauphine இல் ஆரம்பித்து, உட்சுற்று வீதியான périphérique இல் 13h00 மணிக்கும், மற்றும் Lyon Cherbourg, Laval, Lille, Bayonne, Nice, Toulon, Ajaccio ஆகிய நகரங்களிலும் கடல் கடந்த மமகாணங்களான La Réunion, Guyanne ஆகியவற்றிலும் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கின்றது.

வீதி விபத்துக்களளைத் தவிர்ப்பதற்காகவே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையிலும் போராட்டங்கள் தொடர்கின்றன.