😮🇫🇷பிரான்ஸ் நாட்டவரின் அதிர்ச்சிகரமான செயற்பாடு!எல்லையில் கொந்தளிக்கும் பிரித்தானியர்!!

பிரித்தானியாவிலிருந்து பிரான்ஸ் செல்ல முயன்ற பிரித்தானியர்கள் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டதால் ஆத்திரம் அடைந்துள்ளார்கள்.யூன் 2 முதல் பிரான்சுக்கு செல்லும் பிரித்தானியர்கள், கட்டாயம் பயணித்தே ஆகவேண்டும் என்பதற்கு சரியான காரணம் கொடுத்தால் மட்டுமே பிரான்சுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற விதியை திடீரென அறிமுகம் செய்தார் பிரான்ஸ் ஜனாதிபதி பிரித்தானியாவில் ‘Covid Delta’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்திய வகை கொரோனா வைரஸ் பரவல் குறித்த அச்சம் காரணமாகவே பிரான்ஸ் இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மரணம், குழந்தைகளை கவனித்தல் ஆகிய காரணங்களுக்காக பிரான்சுக்குள் செல்பவர்கள் மற்றும், பிரான்ஸ் குடிமக்கள் அல்லது ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களாகவும் இருப்பவர்கள் மட்டுமே பிரான்சுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

அத்துடன், பயணம் புறப்படுவதற்கு 48 மணி நேரம் முன்பு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனை (முன்பு இது 72 மணி நேரமாக இருந்தது), பிரான்சுக்குள் நுழைந்ததும் 7 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தல் என பல கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று பிரான்ஸ் செல்ல முயன்ற பிரித்தானியர்கள் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டதால் ஆத்திரமடைந்தார்கள்.