❗🛑🇬🇧பிரித்தானியாவிற்கு மீண்டும் அச்சுறுத்தல்!பின்வாங்குமா அரசு?

பிரித்தானியாவில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்றில் இரண்டு பங்கு அதிகரித்துள்ளதாக தேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலகம் அறிவித்துள்ளது.அந்த வகையில், இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட டெல்டா மாறுபாடு போல வளர்ந்து வரும் விகிதம் காணப்படுகிறது என தேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நோய் பரவலின் அதிகரிப்பு செங்குத்தாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் இன்னைய தினம் புதிதாக 6,278 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறைந்த தளத்திலிருந்து கோவிட் வழக்குகள் அதிகரிப்புக்கு சமமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், வைத்தியசாலையில் சேர்க்கப்படுவதும் மற்றும் இறப்புகள் கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது சற்று குறைவாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களின் விகிதம் ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது கோவிட் வழக்குகளின் அதிகரிப்பிற்கான ஆரம்ப அறிகுறிகள் என தேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் நோய் பரவல் குறைவாக உள்ளது, எனினும், ஸ்காட்லாந்து சமீபத்திய வாரங்களில் தொற்றுநோய்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை காணமுடிவதாகவும் கூறப்பட்டுள்ளது.இதேவேளை, பிரித்தானியாவில் எதிர்வரும் 21ம் திகதி கோவிட் கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், தற்போதைய நிலை அரசின் தீர்மானத்தில் தாக்கம் செலுத்த கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது