🇬🇧பிரித்தானியாவில் மனைவியையும் மகனையும் கொன்றுவிட்டு தப்பியோடிய நபரால் பரபரப்பு!!!!!

பிரித்தானியாவில் மனைவியையும் மகனையும் கொன்றுவிட்டு தப்பியோடிய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.Lincolnshireஇலுள்ள Louth என்ற இடத்தைச் சேர்ந்த Daniel Boulton (29) என்னும் நபரையே பொலிசார் கைது செய்துள்ளனர். Boulton, 26 வயது பெண் ஒருவரையும், அவரது 9 வயது மகனையும் கத்தியால் குத்தியுள்ளார்.அந்த பெண் Boultonஇன் மனைவி என்று கருதப்படுகிறது. அவர்கள் இருவரையுமே மருத்துவர்களால் காப்பாற்றமுடியவில்லை. சம்பவ இடத்திலிருந்து கத்தி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அவர்கள் இருவரையும் கத்தியால் குத்திவிட்டு ஓடிய Boulton, பணியில் இல்லாத பொலிசார் ஒருவரை தாக்கியதாகவும், நல்ல வேளையாக அவருக்கு உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் கூறப்படுகிறது.அவர் ஆபத்தானவர் என்று கூறியுள்ள பொலிசார், பொதுமக்கள் அவரைக் கண்டால், அவரருகே செல்லவேண்டாம் என்றும், உடனே பொலிசாரை அழைக்குமாறும் கேட்டுக்கொண்டனர், இந்நிலையில் தற்போது அவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.